தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிம்பு. இவர் சுமார் 12 வருடம் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார்.
அதாஹ்ன் பிறகு காதல் அழிவதில்லை படத்தில் கதநாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மன்மதன், வல்லவன், சேவல், காளி, வானம், சரவணா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார்.
இவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான், இதன் பிறகு இவர் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது.
இந்நிலையில் மாநாடு பட பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
கொரானோ வைரஸ் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த இவர் ரசிகர் ஆனந்த் எனபவருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுளள்து.
இதனை அறிந்த சிம்பு ஆனந்திற்கு போன் செய்து அவருக்கு நீங்கள் குணமடைந்து விடுவீர்கள், சீக்கிரம் வீடு திரும்புவீர்கள் என்றும், ஒரு குட்டி கதை சொல்லி அவருக்கு தெம்பும் அளித்துள்ளார், இதனை சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர்.