Sunday, May 12, 2024
-- Advertisement--

நடிகர் சிம்புக்கு என்னாச்சு.? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை…!!!

நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் நடித்து வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம்தான் மாநாடு. நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாபெரும் ஹிட் படம் கொடுத்தார். அதை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் நேற்று வெளியானது.

இந்நிலையில் திடீரென்று சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் வைரல் காய்ச்சல் என கூறப்படுகிறது. ஆகையால் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles