Saturday, May 11, 2024
-- Advertisement--

பல வருடங்களுக்கு முன்பே ஹிந்தி படத்தில் நடித்த சந்தானம்..!!! கமல் கெட்டப்பில் மாறிய சந்தானம் புகைப்படம் உள்ளே..!!!

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நம்மை சிரிக்க வைத்து கொண்டிருந்த இவர் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். அடுக்கடுக்காக கவுண்டர்கள் வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானத்தின் நகைச்சுவை தற்பொழுது மிஸ்ஸிங்.

தமிழில் சில படங்கள் சந்தானத்தை நம்பியே எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகும் அத்தனை படங்களும் சந்தானத்தை நம்பி தான் படம் நகரும். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களில் சந்தானத்தின் பங்கும் உண்டு.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் அறிமுகமாகிய போது அவரது படங்களில் சந்தானம் தான் கூடவே உறுதுணையாக நகைச்சுவை காட்சிகளில் நடித்து கொடுத்தார். காமெடியனாக வெற்றி பெற்ற சந்தானம் ஹீரோவாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் களம் இறங்கி நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

குறிப்பாக இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ ஒன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சில படங்கள் பெரிய வரவேற்பை கொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் சந்தானம்.

சந்தானம் முதன்முதலாக ஹிந்தியில் சின்னு மன்னு என்ற ஒரு படத்தில் அபூர்வ சகோதரர்கள் அப்பு கெட்டப்பில் நடித்திருக்கிறார். தற்பொழுது அந்த புகைப்படத்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles