கொரானோ வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிதி உதவி அளித்து வந்தாலும், அது அனைவரிடமும் பொய் சேர்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் சினிமா துறையில் உள்ள கடை மட்ட ஊழியர்களும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் ரஜினி, கமல், நயன்தாரா, சிவகார்த்திக்கேயன், அஜித், விஜய், இன்னும் பல நட்சத்திரங்கள் நிதித்தொகை அளித்தனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொழிலார்கள் 23 ஆயிரம் பேருக்கும் அவர் அவர் வங்கி கணக்குகளில் ரூ 3000 வந்து சேரும் படி செய்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவு நீடிப்பின் மேலும் ஒரு ரூ 3000 தருவதாகவும் அவர் வாக்குறுதி கூறியுள்ளார். இவர் மொத்தமாக வழங்கிய நிதி ரூ 7 கோடி ஆகும்.