எத்தனை அதிசயங்கள் இந்த உலகத்தில் மூழ்கி இருந்தாலும், நம் அனைவர்க்கும் பொதுவான அதிசியம் அம்மா, எத்தனை முறை வாழ்த்தினாலும், எத்தனை முறை போற்றினாலும் இந்த அதிசியத்திற்கு பத்தாது.
உயிர்க்கு உத்திரவாதம் கிடையாது என்று தெரிந்தும் ஒரு உயிரை உருவாக்க தன் உயிரை பணயம் வைக்கும் துணிச்சல் அம்மாவிற்கு மட்டுமே உடையது, பாவாடை அணிந்து சுற்றி திரிந்து, அழகும், கலையாத உடையும் மிகவும் முக்கியம் என வாழும் வாழக்கையை கரு உண்டான பின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து கொள்ளும் சகிப்பு தன்மை அம்மாவால் மட்டுமே முடியும்.
இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் அம்மாவிற்கும், மனைவிக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளர் ரியோ தன் மனைவி ஸ்ருதிக்கு அன்னையர் தின வாழ்த்தை கூறியுள்ளார்.
அதில் எல்லா அம்மாக்களும் பெற்றடுப்பது போல தான் நீ குழந்தையை பெற்றுஎடுத்தாலும், சுட்டி பெண் அம்மாவாக மாறியது எனக்கு அதிசயத்தை ஏற்படுத்தியது, நீ குழந்தையை பெற்றடுக்க மருத்துமனையில் இருக்கும் பொது தான் உன் தைரியம் எனக்கு புரிந்தது, என் வாழ்வில் மூன்று அம்மாக்கள் இருந்தாலும், இந்த அந்நியர் தினம் உனக்கு மிகவும் ஸ்பெசல் என கூறியுள்ளார்.