தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். ஒரு சக மனிதனின் சந்தோச மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட யாரும் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்று உலகே காத்துகொண்டு இருக்கிறது.
இதற்கான பதில் கொரானோ போனால் தான் நாம் போக முடியும் என்பது அனைவரும் தெரியும். தற்போது இந்த ஊரடங்கில் பல சினிமா பிரபலங்களின் மரணமும் நிகழ்ந்து வருகிறது.
அதுபோல பிரபல பன்மொழி நடிகர் ரவி வல்லதோல். இவர் சுவாதி திருநாள் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு காட் பாதர், நாலு பெண்கள், சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். இவருக்கு வயது 67 . தற்போது உடல் நிலை சரி இல்லாமல் உயிர் இழந்துள்ளார். இவருக்கு கொரானோ ஊரடங்கு காரணமாக யாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்