கட்டா மிட்டா, கூப்சூரத், காலியா, காம சூத்ரா போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ரஞ்சித் சௌத்ரி. இவர் கேட்டல் பிஷ், பிரேக் அவே, லாஸ்ட் ஹாலிடே உட்பட நிறைய படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மனைவி மற்றும் 16 வயது மகனுடன் வசித்து வந்த ரஞ்சித் பல் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்திருந்தார்.
சிகிச்சை முடிந்து அவர் கடந்த 8 ம் தேதி அமெரிக்கா திரும்பி இருக்க வேண்டும்.லாக்டௌன் காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் மும்பையில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு பிறகு குடல்புண் ஏற்பட்டது.
இதனால் அறுவை சிகிச்சை செய்த அவர் திடீரென உயிர் இழந்தார்.
லாக்டௌன் காரணமாக திரை பிரபலங்கள் பலரும் இவர் இறுதி சடங்கில் கலந்துகொள்ளமுடியவில்லை.