பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் சமூகத்தில் நடந்த போது குரல் கொடுக்கும் இந்த சமுதாயம் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை சற்று கவனிக்க மறந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சாத்தான்குளம் வணிகர் சங்கத்தில் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜின் உயிரிழப்பு தற்போது மிகப்பெரிய அளவில் தமிழக மக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
காவல்துறை எந்த அளவு சிரமத்திலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்து நல்ல பெயரை வாங்கி வந்த நிலையில், ஒரு சில சமூக துரோகிகளின் செயலால் ஒட்டுமொத்த காவல் துறையே தற்பொழுதுகரையுடன் உள்ளது. மிருக தன்மையுடன் ஒரு சில காவல்துறையினர் செய்த செயலால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீது கோபமாக தமிழக மக்கள் உள்ளனர்.
சாத்தான் குலத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இழப்பிற்கு உலக நாயகன் கமல் மற்றும் ராஜ்கிரன் நியாயம் கேட்டு ட்விட் செய்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் தந்தையும் மகனும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும், விடக்கூடாது சத்தியமா விடவே கூடாது என்று டுவிட் செய்திருந்தார். இந்த ட்வீட் தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.
இதன்பிறகும் அரசு அலட்சியம் காட்டாமல் தண்டனைக்குரியவர்கள் தண்டிக்கப்பட்டு காவல் நிலையத்தின் மேல் உள்ள கரை போக வேண்டும் என்பதே அனைவரது அபிப்ராயம்.