தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கருடன் இணைந்து சிவாஜி, எந்திரன், எந்திரன் 2 போன்ற படங்கள் நடித்துள்ளார்.
இந்த படங்கள் அனைத்தும் மிக பெரிய வசூலை உலக அளவில் பெற்றன. எந்திரன் படம் வழக்கமான கதையிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தது. இதில் ரஜினி ரோபாவாகவும் நடித்து இருந்தார்.
இப்படத்தில் ஒரே காரில் இரண்டு ரஜினி போவது போல் காட்சி படமாக பட்டது. அதில் ரஜினிக்கு பதிலாக இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் நடித்து இருந்தாராம்.
இதற்கான காட்சிகள் VFX மூலம் எப்படி மாற்றப்பட்டது என்பதை இந்த காட்சி உருவான வீடியோ மற்றும் புகைப்படங்களை தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.