Monday, May 6, 2024
-- Advertisement--

பாகுபலி புகழ் ராணா விற்கு விரைவில் நிச்சயதார்த்தம்..! குவியும் வாழ்த்துக்கள்..! ஆனால் ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..!

தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்தவர் ராணா. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் இஞ்சிஇடுப்பழகி, பெங்களூர் நாட்கள், என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

தெலுங்கு மொழியில் உருவான பாகுபலி படத்தில் இவர் நடித்த பிறகு இவர் புகழ் இந்திய சினிமா எங்கும் பரவியது. இந்தப்படத்திற்கு பிறகு இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். இந்நிலையில் இவரும் நடிகை த்ரிஷாவும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை இருவருமே மறுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றுதான் சொல்லி வந்தனர்.

சமீபத்தில் நடிகை ராணாவின் அப்பாவான தயாரிப்பாளர் சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் ராணாவுக்கும் மியூஷிகா என்ற பெண்ணுக்கும் நீண்டநாளாக பழக்கம் இருப்பதாகவும் ஒட்டுமொத்த குடும்பமும் இதற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறினார். ராணாவிற்கும் மியூஷிகாவிற்கும் இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார்.

மியூஷிகா ஹைதராபாத்தில் உள்ள டியுடிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராணாவும் தனது இன்ஸ்டாகிராமில் இந்த தகவலுக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் நடிகரான அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராணாவுடன் கிசுகிசுக்களில் அடிபட்ட நடிகை திரிஷா எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.

இதனால் திரிஷா வருத்தத்தில் உள்ளாரா என்பது போல் கிசுகிசுக்கள் வெளி வருகின்றன.

View this post on Instagram

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles