தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் சினிமா பயணத்தை பாகுபலிக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கும் அளவிற்கு பாகுபலி படம் இவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை இவர் சினிமா பயணத்தில் பெற்று தந்தது.
இந்த படத்தில் நடித்த பிறகு ஆயிரக்கணக்கில் இவருக்கு காதல் கடிதங்களும், காதல் தூதுகளும் பெண்களிடம் இருந்து வந்தததாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இவருக்கு எப்போது திருமணம் என்று பலபேர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இவருடன் நிறைய படங்களில் நடித்த நடிகை அனுஷ்கவை இவர் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் இதை இருவரும் மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெலுங்கில் மெகா ஸ்டாராக இருந்து வரும் சிரஞ்சீவியின் சொந்தகார பெண் மற்றும் நடிகையான நிஹாரிகா என்பவரை இவர் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்ததுள்ளன.
நிஹாரிகா தமிழில் விஜய்சேதுபதியோடு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த வதந்தியை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.