Friday, April 12, 2024
-- Advertisement--

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்…!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

நடிகர் மனோபாலா உடல்நல குறைவால் இன்று காலமானார். பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபாலா. நடிகர் மனோபாலா 1979 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகமானார். அவர் முதலில் இயக்குனர் பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அதோடு சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பிறகு 1982 ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கினார். தமிழில் முதல் படமான ஆகாய கங்கை என்ற படத்தை இயக்கினார். மனோபாலா அதைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று கனவோட வந்த மனோபாலாவிற்கு நடிப்பின் மூலமே வெற்றி பெற முடிந்தது. அதுவும் அவர் நடித்த காமெடி காட்சிகள் என்றும் மக்கள் மத்தியில் மகிழ்வித்து வருகின்றனர். இவர் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ளார்.

குறிப்பாக அவர் தயாரித்த முதல் படம் சதுரங்க வேட்டை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பாம்பு சட்டை என்ற படத்தை தயாரித்தார். இந்த நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோபாலா இன்று காலமானார். அவருக்கு வயது 69.

மனோபாலாவின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனோபாலாவின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles