Thursday, May 9, 2024
-- Advertisement--

“எனக்கு இது தேவை தான்” பஞ்சாங்கம் குறித்து பேசியதற்கு விளக்கம் கொடுத்த மாதவன்..!!! MADDYக்கு வந்த சோதனை..!!!

தமிழ் ரசிகர்களால் MADDY என்று கொண்டாடப்படும் நடிகர் மாதவன். முன்பெல்லாம் காதல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதவன் சமீபகாலமாக வித்யாசமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக மாதவன் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் மாதவனுக்கு பெரிய திருப்புமுனையை இருந்தது. அதுபோல விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

வித்தியாசமான திரைக்கதை இருந்தால் மக்கள் ரசிக்கிறார்கள் என்று நன்றாக புரிந்து கொண்ட மாதவன் நம்பிராஜன் என்ற விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க ஆசைப்பட்டார். இதற்காக விஞ்ஞானி நம்பி ராஜன் அவர்களை சந்தித்து கதை விவாதங்களில் ஈடுபட்டு மாதவன் கதையைத் தானே எழுதி உள்ளார்.

Madhavan Rocketry Film Suriya Guest Appearence

தற்பொழுது மாதவன் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்திற்கு ராக்கெட்ரி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரஸ்மீட்டில் மாதவன் இந்தப் படம் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பிராஜன் அவர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் என்று கூறியவர். இஸ்ரோ 2014-இல் அனுப்பிய மங்கள்யான் விண்கலம் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து விண்ணில் ஏவப்பட்ட பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Madhavan in Rocktery Film

மாதவனின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் பெரிய வைரலானது . பலர் மாதவனின் பேச்சுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தார்கள். சமீபத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பஞ்சாங்கத்தை வைத்து எப்படி விண்கலத்தை விண்ணுக்கு ஏவ முடியும் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாதவன் இன்று விளக்கம் அளித்துள்ளார் அதில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைவதற்கான ராக்கெட்டை ஏவ இஸ்ரோவுக்கு பஞ்சாங்கம் தேவைப்பட்டது என்று பேசி எனக்கு இவை எல்லாம் தேவைதான் அறியாமல் அப்படி பேசிவிட்டேன் ஆனால் 2 இன்ஜின்களை மட்டுமே வைத்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிட முடியாது. அது ஒரு சாதனை விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸடார் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles