மாதவன் தமிழ்நாட்டில் “மேடி” என்று செல்லமாக அழைக்கபடும் சாக்லேட் ஹீரோ. மணிரத்தினத்தின் “அலைபாயுதே” என்ற படத்தில் ஹீரோவா அறிமுகம் ஆகினர் மாதவன். தனது முதல் படமே மாபெரும் வெற்றியை கண்டார். முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த மாதவன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் “மின்னலே” படத்தில் நடித்தார் அந்த படமும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று மாதவனை ஒரு சாக்லேட் ஹீரோ என்ற அளவுக்கு உயர்த்தியது. அதன் பின் காதல் கதைகள் என்றால் மாதவனை அணுகினர் இயக்குனர்கள். தமிழ் மட்டும் அல்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மாதவன்.
அதன் பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த மாதவன் ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க விருப்பப்பட்டு லிங்குசாமியின் “ரன்” மற்றும் சீமானின் “தம்பி” படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த “விக்ரம் வேதா” மாபெரும் வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: நடுவிரல் பற்றி ட்விட் போட்ட நடிகை அமலாபால் …!!!! தவறாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..
சமீபத்தில் மாதவனின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மடிசார் கட்டிய தனது மனைவியை மடியில் அமர் வைத்தது போல இருந்தது. இந்த அழகன் புகைப்படம் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.