Friday, May 3, 2024
-- Advertisement--

பிகில் அமிர்தாவிற்கு வீடியோ கால் செய்த பிக்பாஸ் பிரபலம் கவின்..!!! புகைப்படங்கள் இதோ.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கவின். இதன் பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பெற்றார். இதன் பிறகு இவர் சில படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினர்.

ஆனால் இவர் நடித்த நட்புனா என்னனு தெரியுமா என்ற படம் வெளிவர தாமதம் ஆனதால் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். இந்த சீஸனில் மிகவும் ப்ளேபாய் போல விளையாட்டுத்தனமாக இருந்த கவின், ஒரு கட்டத்தில் மிகவும் சீரியஸான நபராக மாறினார். இவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த லாஸ்லியாவின் காதலில் இருந்ததால் மிகுந்த சர்ச்சைகளை சந்தித்தார். இவர்கள் காதல் ஒரு தனிக்கதை ஆகவே அந்த சீசன் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சீசனின் பாதியிலேயே ஒரு பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கவின் பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து வெளியேறினார்.

சீசனில் இருந்து வெளியேறிய பிறகு லாஸ்லியாவின் கவினும் அவரவர் பாதையில் சென்று விட்டனர். இவர்கள் காதல் என்னவானது என்பது இன்றுவரை கேள்விக்குரியகவே உள்ளது, இந்நிலையில் லாஸ்லியா சில படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார் , இந்நிலையில் கவின் லிப்ட் என்ற படத்தில் பிகில் பட அமிர்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது ஒரு புகைப்படம் கூட எடுக்காத நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் கவின், அம்ரிதாவிற்கு வீடியோகால் மூலம் போன் செய்து இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்துள்ளார். அதில் ஹாப்பி பிறந்தநாள் பட்டி.. ஸ்பாட்ல செம பிஸியா இருந்ததால ஒரு போட்டோ கூட எடுத்துக்கால நாங்க.. இப்போ தான் வேலையே இல்லைய… நான் கஷ்டப்பட்டு வீடியோ கால் மூலம் போட்டோ…எடுத்துட்டேன் என பதித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles