Friday, May 17, 2024
-- Advertisement--

நடுக்கடலில் மிதக்கும் மக்கள் நீதி மய்யத்தை திசை மாற்றி கொண்டு போகும் கமல்..!!! கூட்டணி போடுகிறாரா கமல்.

நடிகர் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர பிரச்சாரத்தில் இந்த அரசியலில் ஈடுபட்டு வந்தார். சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்ற பெரிய நம்பிக்கையில் இருந்த கமலஹாசனுக்கு தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரிய வருத்தத்தை கொடுத்தது.

கமல் வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் மக்களுக்கு கமலஹாசன் இந்த தேர்தலில் ஓரளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்ற நம்பிக்கை பெரிதாக இருந்தது ஆனால் அனைத்து இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்வியை பெற கோயம்புத்தூர் தெற்கு பகுதியில் மட்டும் கமலுக்கும், பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை அன்று இரவு 9 மணி வரை சென்றது. கமல் முதல் முதலாக எம்எல்ஏ ஆகப் போகிறார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் திடீர் அதிர்ச்சி கொடுத்து முன்னணியில் வாக்குகளைப் பெற்று ஜெயித்தார் வானதி சீனிவாசன்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு நடிகர் கமலஹாசனின் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தார்கள். அதுவும் நம்பிக்கைக்குரிய முக்கிய வேட்பாளர்கள் என்று அவர் நினைத்திரந்த ஒரு சிலர் விலகியது அவருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கட்சியில் முக்கிய பதவியில் இருந்த சிலர் விலகியது கமலஹாசனுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தாலும் துரோகிகளை களை எடுத்து விட்டோம் இனி நமக்கு ஏறுமுகம்தான் என்று பஞ்ச் வசனங்கள் பேசி வந்தார்.

kamalhassan

தற்பொழுது கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துவதற்கான அடுத்தடுத்த பணிகளில் இறங்கிவிட்டார் அவருடைய பிறந்த நாள் வருகின்ற நவம்பர் மாதம் வருகிறது இந்த பிறந்தநாள் அவருக்கு 65 வது பிறந்த நாள் என்பதாலும், கமலஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் என்பதாலும், கமல் அவர்களின் தந்தையின் நினைவு தினம் நவம்பர் 7 அன்று வருவதாலும் ஒரு பெரிய விழா ஒன்றை கமலஹாசன் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த விழாவில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பிரமாண்டமாக நடத்த திட்டம் போட்டுவருகிறாராம். அவரது பிறந்த நாள் அன்று மக்கள் நீதி மய்யம் வலுவான கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் பங்கு பெற முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

யாருடன் கூட்டணி என்பதை அவரது பிறந்த நாள் தினத்தில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles