Tuesday, December 3, 2024
-- Advertisement--

குறும்பா ஆரவிற்கு முடிவெட்டும் ஜெயம் ரவி..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சினிமா பின்புலம் இருந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க போராடி வென்றவர் நடிகர் ஜெயம்ரவி. ஜெயம் ரவியின் அண்ணன் மற்றும் இயக்குனரான மோகன் ராஜா ஜெயம் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரவியை அறிமுகப்படுத்தினார்.முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியைப் பெற்று தந்தது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன. தற்போது இவர் கைவசம் பூமி, ஜனகனமன,பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்கள் உள்ளன.

இந்நிலையில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மகளான ஆர்த்தியை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஆரவ் மற்றும் அயன் ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகனான ஆரவ் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் மகன் மற்றும் மனைவி யோடு பொழுதை கழித்து வரும் ஜெயம்ரவி,முடிவெட்டும் கடையை மூடி உள்ளதால் தன் மகன்களுக்கு தானே ஹேர்கட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles