தற்போது சினிமா துறையில் நிறைய இழப்புகள் நடந்து வருகின்றன. சினிமா துறையை சேர்ந்த பலரும் இறந்துவருகின்றனர். இது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் பலம் பெரும் நடிகர் ஜெரி ஸ்டில்லர். இவருக்கு வயது 92 . இவர் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருந்தவர். நியூயார்க்கில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார் ஜெரி. இந்நிலையில் கடத்தல் சில வருடங்களாகவே இவர் உடல் நல பிரச்சனை இருந்து வந்தது. இதற்கான சிகிச்சையும் இவர் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இவர் உயிர் இழந்தார். இவர் மனைவி அண்ணி மியரா 2011 ஆம் ஆண்டு உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமி ஸ்டில்லர் என்ற மகளும், பென் ஸ்டில்லர் என்ற மகனும் உள்ளனர். இவர் மகனும் ஒரு பிரபல நகைச்சுவை நடிகனாவார். இந்நிலையில் இவர் மரணம் ஹாலிவுட் பிரபலங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.