Saturday, May 4, 2024
-- Advertisement--

தனுஷின் முன்னாள் அண்ணியின் இளமை துள்ளலான படத்தை வெளியிட இருக்கும் பிரபல தயாரிப்பாளர்…!!! காத்துக்கிடக்கும் அக்கட தேசம்.

இயக்குனர் செல்வராகவன் அவர்களின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் நடித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை தெலுங்குவில் 7ஜி பிருந்தாவன் காலனி என்று ரீ ரீலீஸ் செய்து உள்ளனர்.

selvaraghavan soniya agarwal wedding pictures

செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்று பெரிய ஹிட் படமாக அங்கீகரிக்கப்பட்ட படம் தான் செவன் ஜி ரெயின்போ காலனி. யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட்

படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் அவர்கள் அவரது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்தார் முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருந்தால் ரவி கிருஷ்ணா. அனிதா என்ற கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்திருந்தார் இருவருமே நடிப்பில் அசத்தி இருந்தனர். ஜனவரி மாதம் பாடலில் சோனியா அகர்வாலின் இளமை துள்ளலான ஆட்டத்தை எப்படி ரசிகர்கள் மறப்பார்கள்.

குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது நமக்கே ஒரு இனம் புரியாத கலக்கம் இருக்கும் அந்த அளவிற்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பாதித்தது.

மாபெரும் ஹிட் படமான 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை 7ஜி பிருந்தாவன் காலனி என்று அப்போதே தெலுங்குவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்பொழுது மீண்டும் 7ஜி பிருந்தாவன் காலனி தெலுங்கு வெர்சனை டிஜிட்டலைஸ் செய்து தெலுங்குவில் வெளியிட இருக்கிறார்கள்.

வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி இந்த திரைப்படம் ஆந்திராவில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles