கூல் சுரேஷ் சிம்புவின் தீவிர ரசிகர் இவர் தமிழில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார் ஆனால் எந்த ஒரு படத்திலும் பெரிய வரவேற்பு கிடைக்காததால் நொந்து போன கூல் சுரேஷ் தனது தலைவன் சிம்புவிற்கு மட்டும் குரல் கொடுத்து வந்தார்.

சிம்பு ஏதாவது பிரச்சனையில் அல்லது சர்ச்சையில் மாட்டிக் கொண்டால் அந்த இடத்தில் கூல் சுரேஷ் சிம்புவுக்கு ஆதரவாக பேசி வருவார். வெந்து தனித்த காடு படத்திற்கு பெரிய ப்ரோமோஷன் கூல் சுரேஷ் தான். தியேட்டரில் எந்த திரைப்படம் வெளியானாலும் சரி அதனை வெள்ளிக்கிழமை முதல் ஷோ பார்த்துவிட்டு வெளியில் இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் வெந்து தணிந்த காடு அண்ணனுக்கு வணக்கத்தை போடு என்று கலகலப்பாக பேசி வந்தார்.

மீடியா நண்பர்களும் முதலில் கலகலப்பாக பேசும் கூல் சுரேஷிடம் மைக் கொடுத்து கண்டன்ட் வாங்கி வந்தனர். மைக் முன்னே நீட்டியதும் கூல் சுரேஷ் கண்டபடி ஏதாவது பேசுவார் மீடியாக்களுக்கு கண்டன்ட் கிடைக்கும் அதனாலே youtube சேனல் நடத்துபவர்கள் இவர் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் வரை காத்திருந்து அவரை பேட்டி எடுத்து செல்வார்கள். கூல் சுரேஷ் பேசுவது பல நேரத்தில் எரிச்சலாக இருந்தாலும் சில நேரத்தில் பார்க்க செம காமெடியாக இருக்கும் அந்த அளவிற்கு ஏதாவது கலாய்த்து கொண்டு பேசிய வருவார்.

அவர் படத்தைப் பார்த்துவிட்டு வந்து மீடியாக்களுக்கு கொடுக்கும் ரிவ்யூ அந்த படத்திற்கு ஒருவித பிரமோஷன் ஆகவே இருக்கும். வழக்கம் போல வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களை பார்க்க சென்ற கூல் சுரேஷ் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தார் அப்போது பாம்பு போன்ற ஒன்றை கையில் வைத்துக்கொண்டு விஷால் சார் நீங்க கருப்பா இருந்தாலும் கலையா இருக்கீங்க. உயரமா இருந்தாலும் கில்லி மாதிரி இருக்கீங்க. நின்னு பேசுறீங்க. விஷால் சார் உங்களோட அனகோண்டாவுக்கு என்று கூறிவிட்டு ஜம்ப் பண்ணி கையில் வைத்திருந்த பாம்புக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அதனை பார்த்தவர்கள் பலர் முகம் சுளித்த மைக்கை பின்னடுத்தனர் சிலர் கொண்டு சிரித்து கொண்டே சென்று விட்டனர் இந்த செயல் இனைய வாசிகளிடம் பெரும் டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அனகோண்டா என்று விஷாலை ஒரு நடிகை கலாய்த்த விஷயம் அனைவரும் அறிந்து ஒன்றே அந்த செய்தி புரிந்தவர்க்கு இந்த செய்தி நிச்சயம் புரியும்.