அபர்ணதி “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் ஆனவர். கலர்ஸ் தமிழ் சேனல்லில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆர்யா தான் திருமணம் செய்து கொள்ள 15 பெண்களை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்வர் என்று கூறினார்கள்.
அதையும் நம்பி ஆர்யாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெண்கள் குவிந்தனர். அதில் அபர்ணதி ஆர்யாவை தான் திருமணம் செய்வேன் என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் ஆர்யாவை வா போ என்றெல்லாம் அழைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அபர்ணதியை ஆர்யாவிடம் சிபாரிசு செய்தார்கள் ஆனால் ஆர்யா அவரை தேர்வு செய்யவில்லை. ஆர்யா திருமணம் யாரை செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருந்த அனைவர்க்கும் கடைசியில் ஆர்யா வைத்த ட்விஸ்ட் ஊர் அறிந்த விஷயம்.
அபர்ணதி தற்பொழுது ஜிவி பிரகாஷின் “ஜெயில்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.