தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சினிமாவுக்காக தன் உடலை வருத்திக் கொண்டும் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஐ படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதேபோல் வித்தியாசமான கெட்டப்களில் நடிப்பதில் கில்லாடி ஆவார். நடிகர் விக்ரம் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார்.
தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்திற்காக மிகவும் ஈடுபாட்டுடன் உடல் எடை குறைத்து நடித்து வருகிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மேனன், பசுபதி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் வரலாறு சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேற்று தொடங்கி நடைபெற்றது. அதில் விக்ரமும் கலந்து கொண்டு உள்ளார். நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கில் ஒத்திகையின் போது விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார்.
அதனைக் கண்ட படக்குழுவினர் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு அவரை முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் நடிகர் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் குணமான பின்பு தான் ஷூட்டிங் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.