Saturday, May 4, 2024
-- Advertisement--

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி…!!! பீஸ்ட் படக்குழு வெளியிட்ட தகவல்.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் பாடல் வரும் மார்ச் 20 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல் வெளியான 20 நாட்களில் 120 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழா என்றாலே விஜய் ரசிகர்கள் விஜயின் பரபரப்பான பேச்சுக்காக ஆவலாக காத்திருப்பார்கள். இந்த நிலையில் விஜயின் ரசிகர்கள் பாடல் வெளியீட்டு விழாவை எதிர்பார்த்து ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles