நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்தது. இந்த படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்தவர் தான் நடிகர் தவசி. இவர் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி முருகன் படத்திலும் நடித்து இருந்தார்.
சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். கம்பீரமான உடல் தோற்றதுடன் இருந்த மனிதன் புற்று நோய் தாக்கியதால் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனம் நொந்து போய் உள்ளனர். அவர் சீக்கிரம் குணம் அடைய ஆறுதல் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
தவசியின் மகன் இணையத்தில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து கூறி மருத்துவச்செலவுக்கு உதவி கேட்டு வருகிறார்.