Friday, May 17, 2024
-- Advertisement--

குக் வித் கோமாளி இருந்து வெளியேறிய மணிமேகலை …!! இந்த காரணத்திற்காகவா வெளியேறினார் ..!!!

குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்றவர் மணிமேகலை. இவர் ஆரம்பத்தில் பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறு சிறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மணிமேகலை மிஸ்ஸஸ் சின்னத்திரை மூலம் சற்று மக்கள் மக்களுக்கு பரீட்சியமான ஒருவராக மாறினார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.

இவருக்கு மாபெரும் திருப்புமுறையாக அமைந்தது குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக களமிறங்கிய மணிமேகலையைக்கு மக்களின் ஆதரவு பெரிய பெருகியது. புகழ் பெற்ற கோமாளியாக மாறி தற்போது பிஸியான பிரபலமாக முன்னேறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அப்புறம் மணிமேகலை, சொந்தமாக கார் கூட வாங்கினார். சொந்தமாக youtube சேனல் ஒன்றும் தொடங்கி அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார் மணிமேகலை. இந்நிலையில் குக் வித் கோமாளி இருந்து தற்பொழுது மணிமேகலை வெளியேறி உள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் இன்று குக் வித் கோமாளி கடைசி எபிசோடு. இனிமேல் நான் வரமாட்டேன். நானே வருவேன் கெட்டப்பில் இதை நான் அறிவிக்கிறேன் என்று தொடங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீசனில் இருந்து எனக்காக மக்கள் நிறைய ஆதரவு மற்றும் அன்பை கொடுத்து உள்ளீர்கள் இதற்காக நான் நிறைய நன்றி கடன் பெற்றுள்ளேன்.

எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று நிறைய முயற்சி செய்து வருகிறேன். குக் வித் கோமாளி மூலம் உங்களை எந்த அளவுக்கு என்டர்டைம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நான் செய்துள்ளேன். உங்கள் அன்பு நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளிலிருந்து மணிமேகலை விலகியது ஷிவாங்கி தான் காரணம் என்று ஒரு புறம் செய்திகள் வெளி வந்தாலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் இதிலிருந்து விலகி உள்ளார் என்ற செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது. ஏனெனில் குக் வித் கோமாளி சீசன் 3 இல் நடுவராக உள்ள வெங்கடேஷ் பட் சீக்கிரம் குட்டி மணிமேகலையை நாங்கள் பார்க்க உள்ளோம் என்று ஒரு பதிவை வெளியிட்டதாக செய்திகள் வந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles