Monday, May 20, 2024
-- Advertisement--

கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலைக் குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்ட மருத்துவ நிர்வாகம். என்ன பிரச்சனை என்று தெளிவாக விளக்கம்.

நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்ற வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் எபிசோடை முடித்துவிட்டு உடனடியாக அமெரிக்கா சென்று விட்டார்.

அதனால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என யோசித்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்துவிட்டார். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசியபோது “சிகாகோவில் இருக்கிறாரே” இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என சிலர் பேசியது என் காதுகளுக்கு வந்தது.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “கடமை தவறியவன்” என்கிற அவப்பெயர் எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது, இனியும் வராது என நம்புகிறேன் என நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

எனவே வரும் வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா கமல் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் சூட்டிங் என்னவாகும் என்ற ரீதியில் கேள்விகள் எழுந்துள்ளன.அமெரிக்கா சென்று வந்த நிலையில் தொற்று உறுதியாகி உள்ளது.

தற்பொழுது கமல்ஹாசன் உடல் நிலை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது மருத்துவமனை நிர்வாகம். ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறைந்த சுவாசக்குழாயில் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது அவர் மருத்துவ நிர்வாகத்தில் உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles