Friday, May 17, 2024
-- Advertisement--

ஜெயலலிதா நினைவிடத்திலே கோஷங்களால் அடித்து கொண்ட ஓபிஎஸ் – இபிஎஸ் தொண்டர்கள்..!!! வருத்தத்தில் மக்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக யார் அமரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதி எடப்பாடியில் நின்று அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என்று அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் குரல்கொடுக்க அதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவராக அமரவேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வந்தனர்.

ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்குமிடையே இன்று நடந்த அதிமுகவின் எம்எல்ஏ கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்துள்ளதாம். அதில் பன்னீர் செல்வத்தை பார்த்து எடப்பாடி அவர்கள் தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்து யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் எப்படி விட்டுக் கொடுப்பது என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஓ பன்னீர்செல்வம் நீங்கள் செலவு செய்த பணம் கட்சியினுடைய தானே வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால் தான் தென்மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம் என்று பதிலளித்துள்ளார்.

இருவருக்கு இடையில் நடந்த கருத்து வேறுபாட்டில் கூட்டத்தை மே 10ஆம் தேதி அன்று ஒத்தி போட்டார்கள். நான் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் எடப்பாடி. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக நானே இருக்கிறேன் என்று கூறுகிறாராம். இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இன்றைய கூட்டம் தள்ளி போனது தான் மிச்சம்.

ஈபிஎஸ்க்கு ஆதரவாக தொண்டர்கள் ஒரு பக்கம் போட்டிபோட்டுக்கொண்டு கோஷங்கள் எழுப்ப ஓபிஎஸ்க்கு ஆதரவாக மற்றொரு தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வந்தனர். பன்னீர்செல்வம் அவர்களை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயார் என்று கூறி வருகிறார்கள் சில தொண்டர்கள்.

கூட்டம் முடிந்ததும் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று வந்த இபிஎஸ் ஓபிஎஸ் அங்கும் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் உடனே கிளம்பி சென்றார்கள்.

ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் கோஷங்களால் அடித்துக் கொண்டார்கள் தொண்டர்கள். ஐயா ஓபிஎஸ் ஐயா ஓபிஎஸ் என்று ஒரு பக்கம் முழக்கங்கள் ஏல மற்றொரு பக்கம் ஐயா இபிஎஸ் ஐயா இபிஎஸ் என்று தொண்டர்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.

இதனை பார்த்து வரும் மக்கள் ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வைத்திருந்த அதிமுக கட்சியின் நிலைமை இப்படி உள்ளதே என்று வருத்தப்பட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles