Friday, May 17, 2024
-- Advertisement--

மதுரவாயில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மாபிரியாவிற்கு கிடைத்த அமோக வெற்றி..!!! அரசியலில் அடியெடுத்து வைத்த சிங்கபெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் நீதி மய்யத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் தான் பத்மப்ரியா. யூடியூப் சேனல் வழியாக சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த அவருக்கு மக்களிடம் பெரிய ஆதரவு இருந்தது. CIA பற்றி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு பிரபலமான பத்மபிரியா இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரவாயில் வேட்பாளராக தேர்தலில் நின்றார்.

ஒரு இளம் பெண்ணாக தைரியமாக தேர்தலை சந்திக்க முடிவு எடுத்த பத்மபிரியா மதுரவாயல் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை சேகரித்துக் கொண்டு வீடு வீடாக சென்று மக்களிடம் பேசி குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் பிரச்சார வண்டியில் ஏறி கூட்டமே கூடாவிட்டாலும் தனியாளாக நின்று தனது உரை யாராவது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்ற எண்ணத்தில் தனி ஆளாக பிரச்சாரம் செய்து வந்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக நிற்கும் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக தான் இருந்தது. சமூக வலைத்தளத்தில் அவர் பேசும் பிரச்சார வீடியோக்கள் பரவி வைரல் ஆனது ஏகப்பட்ட லைக்ஸ் அள்ளிக் குவித்தது. அவரது வீடியோக்கள் பார்க்கையில் இவருக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று அனைவரும் எண்ண வைத்தது.

இந்நிலையில் தற்பொழுது மதுரவாயில் தொகுதியில் பத்மப்ரியா 7414 வாக்குகளுக்கு மேல் பெற்று பின்னடைவில் இருக்கிறார். இது அவருக்கு கண்டிப்பாக பின்னடைவு அல்ல இது தான் அவருடைய முதல் படி காரணம் அந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினரின் செல்வாக்கு அதிகம் என்பதால் முதல் இரண்டு இடத்தில் திமுக, அதிமுக வும் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக மதுரவாயில் தொகுதியில் திமுக முன்னணியில் உள்ளது அதன் பின் அதிமுக அதற்கு அடுத்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா அவர்களுக்கு தான் அதிக ஓட்டு. மதுரவாயில் தொகுதியில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்து தற்போது பத்மபிரியாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்மப்ரியா 7414 வாக்கிற்கு மேல் வாக்கை பெற்று உள்ளதை அடுத்து நாம் தமிழர் கட்சி கணேஷ்குமார் என்பவர் 4450 வாக்கினைப் பெற்று உள்ளார்.

முதல் முறையிலே தேர்தலை சந்தித்து அதிக வாக்கினை பெற்ற பத்மப்ரியாவிற்கு இது தோல்வி அல்ல முதல் வெற்றி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles