Monday, May 20, 2024
-- Advertisement--

மக்கள் கவனத்தை திருப்பிய 25 வயது இளம்பெண் வேட்பாளர் பத்மப்ரியா..!!! இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்.

தேர்தல் நெருங்கிவிட்டது பிரச்சாரங்கள் முடிவுக்கு வர இருக்கிறது. இனி தேர்தலில் மக்கள் தீர்ப்புக்காக காத்து இருக்கிறார்கள் அந்தந்த கட்சித் தலைவர்கள். எந்த தேர்தலும் இல்லாமல் இந்த தேர்தலில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்பாக செயல்பட்டு தனது தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் புதிய கட்சிகளும் உள்ளே வருவதால் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. திமுக அதிமுக கட்சி தவிர தமிழ்நாட்டிற்கு மாற்றுக் கட்சி இல்லையே என்று நினைத்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இருக்கின்றது.

நாம் தமிழர் கட்சியில் 234 தொகுதியிலும் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களை சரிசமமாக நிறுத்தியுள்ளார் சீமான் அதற்கு பெரிய பாராட்டு தெரிவிக்க வேண்டும் அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனுபவம் மிகுந்த அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு மற்றொரு பக்கம் புரட்சி ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

குறிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா மேல் தான் மக்களின் பார்வை தற்பொழுது உள்ளது. 25 வயதில் ஒரு இளம் பெண் வேட்பாளர் மதுரவாயில் தொகுதியில் நிற்கிறார் அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பத்மபிரியா சென்னை தமிழச்சி என்ற யூடியூப் சேனல் வழியாக மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வந்தவர். ஆசிரியராக பணிபுரிந்து வந்த பத்மப்ரியா தற்போது களத்தில் இறங்கி மக்களுக்காக பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த தேர்தலில் நிற்கிறார்.

பத்மப்ரியா மதுரவாயில் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். அடிக்கின்ற வெயிலும் தனி ஆளாக நின்று அப்பார்ட்மெண்ட் முதல் காலணி வரை ஒரு இடமும் விடாமல் பிரச்சாரம் செய்து மக்களிடம் பேசி வந்தார்.

சில இடங்களில் இவருடைய பேச்சைக் கேட்பதற்கு கூட்டம் கூடவில்லை என்றாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று மக்களிடம் சென்றடைந்தது. பிரச்சார வெற்றி என்பது கூட்டம் கூடினால் தான் என்பதில்லை மக்கள் மனதில் இடம் பிடித்தால் போதும் என்பதற்கு பத்மபிரியா ஒரு உதாரணம்.

பத்மப்ரியா சத்தமில்லாமல் மற்றொரு சாதனையும் நிகழ்த்தியுள்ளார் அது என்னவென்றால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து வேட்பாளர் குறித்த விவரத்தை வேட்புமனுவை 3 லட்சத்து 11 ஆயிரத்து 466 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்தக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களின் வேட்புமனுவை பதிவிறக்கம் செய்தவர்கள் அவரை விட குறைவாக தான் உள்ளது.

அதற்கு பிறகு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் மனுவை 17 லட்சத்து 76 ஆயிரத்து 261 பேர் தரவிருக்கும் செய்துள்ளனர்.

மேலும் பல சாதனைகள் புரிய பத்மபிரியாவற்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles