Sunday, May 19, 2024
-- Advertisement--

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 9 மாத கர்ப்பிணி பெண் திடீர் உயிரிழப்பு…!!! நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் நேர்ந்த அவலம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த புத்தூர் மேடு காலனி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). அவரது மனைவி லாவண்யா (25). இருவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். தற்போது லாவண்யா 9 மாத கர்ப்பிணி அவருக்கு நாளை வளைகாப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு ஏற்கனவே 90 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 11 மணி அளவில் ராமாச்சேரி கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக பட்டறை பெருமந்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாவண்யா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் உயிரிழந்திருக்கலாம் என லாவண்யாவின் தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் லாவண்யாவின் மரணத்தை முறையாக பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த வேண்டும் என லாவண்யாவின் உறவினர்கள் திருவள்ளூர் ஆர்டிஓ பரமேஸ்வரி இடம் புகார் கொடுத்தனர். மேலும் பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் உள்ளதால் அவருடைய உறவினர்கள் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆகையால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles