Friday, May 17, 2024
-- Advertisement--

சாய்பாபா கோவிலுக்கு வந்த 7G ரெயின்போ காலனி ஹீரோ..!!! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே..!!!

ரவி கிருஷ்ணா தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அவர்களின் மகன். வெற்றிகரமாக பல படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் அவர்களுக்கு தனது மகனை எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

செல்வராகவன் ஒரு கதையை AM ரத்தினத்திடம் சொல்ல அந்த கதை பிடித்துப்போய் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினால் என்ன என்று முடிவு செய்த எம் ரத்னம் தனது கிருஷ்ணாவை 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்து வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. செல்வராகவனின் பெஸ்ட் படம் என்றால் அதில் இந்தப் படமும் கண்டிப்பாக இடம்பெறும்.

7ஜி ரெயின்போ காலனி படத்தில் ரவிகிருஷ்ணா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார். சோனியா அகர்வாலை உருகி உருகி காதலிப்பது தனது நண்பர்களுடன் லூட்டி செய்வது என்று கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த ரவி கிருஷ்ணா சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சோனியா அகர்வாலை சந்தித்த ரவி கிருஷ்ணா இருவரும் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டனர். ரவிகிருஷ்ணா தனது தந்தை ஏ.எம்.ரத்தினம் போலவே தீவிர சாய்பாபா பக்தராம்.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவாராம். அப்பாவை போலவே இவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாம். தற்பொழுது அவர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாய்பாபாவை வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles