Sunday, June 2, 2024
-- Advertisement--

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் 5000 பரிசு…!!! திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமல்.

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற உதவுவோர்க்கு 5000 பரிசு வழங்கும் திட்டம் வரும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் அமலாகும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கி ஒரு குறுகிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

ஆனால் பெரும்பாலான விபத்துக்களில் காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக அவரின் உயிரைக் டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நல் உள்ளம் படைத்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை கோல்டன் ஹவர் எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு 5000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 15ஆம் தேதி அமலாக்கி வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles