ராணி பேட்டை, அரக்கோணம் அருகே இருக்கும் எஸ்.கே.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுகுமார் என்று மகன் உள்ளார். இவர் மனைவி பாரதி.
ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் வீட்டில் இருந்த பெரியசாமியிடம் அவரது மருமகள் போண்டா செய்வதற்காக மைதாமாவு வாங்கிவர கூறி இருக்கிறார். ஆனால் அவரோ மைதா மாவுடன் சேர்ந்து தோட்டத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தும் வாங்கி வந்துள்ளார்.
பாரதியோ மாமனார் என்ன வாங்கியுள்ளார் என்பதை படித்து பார்க்காமல் மைதா மாவுடன் சேர்ந்து பூச்சி மருந்தையும் சேர்த்து போந்து செய்து அதை மாமனார், மாமியார், மற்றும் கணவருக்கு கொடுத்து தானும் உண்டு உள்ளார். ஆனால் ஏதோ வித்தியாசமாகவும் ருசி உள்ளதை அறிந்தும் அதை அலட்சியப்படுத்தி பாரதி போண்டா சாப்பிட்டுள்ளார்.

உடனே நால்வருக்கு வாந்தி மயக்கம் வர அக்கம் பக்கத்தினர் நால்வரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையி பாரதியும் அவர் கணவர் சுகுமாரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மாமியார் லட்சுமி மற்றும் மாமனார் பெரியசாமி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.