Sunday, May 19, 2024
-- Advertisement--

திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…!!! 24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்ஐ யாக பணியாற்றியவர் பூமிநாதன். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்காக நவல்பட்டு பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இந்த வழியே 4 பேர் கொண்ட கும்பல் டூவீலரில் ஆடுகளுடன் வந்திருக்கிறார்கள். இதை கண்ட இயற்கை பூமிநாதன் அந்த நபர்களை மறைத்து நிறுத்தி இருக்கிறார்.

ஆனால் அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனர். எஸ்ஐ பூமிநாதன் கும்பல் ஆடு திருடி இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் விரட்டி சென்றுள்ளார். அதைக் கண்ட இசை பூமிநாதன் சக காவல்துறையினருக்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு டூவீலரில் விரட்டி சென்று இருக்கிறார். மேலும் திருச்சி புதுக்கோட்டை களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள கல்லம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற போது பூமிநாதன் ஒரு டூவீலரில் சென்ற நபர்களை பிடித்துள்ளார்.

மேலும் தகவலை உடனே நவல்பட்டு போலீசாருக்கு தெரிவித்திருக்கின்றனர். மேலும் எஸ்ஐ பூமிநாதன் தொடர்ந்து பின்தொடர்ந்த ஆடு திருடர்கள் இருவரையும் விட்டுவிடுமாறு மிரட்டி இருக்கின்றனர். அதற்கு பூமிநாதன் முடியாது எனக் கூறி உள்ளார் அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் நடந்ததால் சுமார் 4 மணி அளவில் பல்லபட்டி பகுதி பொதுமக்கள் அந்த வழியே சென்ற போது போலீசார் ரத்த வெள்ளத்தில் இருப்பத இந்த படுகொலை சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் நடந்ததால் சுமார் 4 மணி அளவில் பள்ளப்பட்டி பகுதி பொதுமக்கள் அந்த வழியே சென்ற போது போலீசார் ரத்தவெள்ளத்தில் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். இதனிடையே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

19 வயதான மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சிவகங்கை மாவட்ட எல்லையில் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட கொலையாளிகள் 2 பேர் சிறுவர்கள் என்றும் மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். கொலையாளிகள் கல்லணை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடங்களாக செய்து வருவதாகவும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles