Sunday, May 19, 2024
-- Advertisement--

மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்த வலிமை திரைப்படம்…!!!

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படத்தின் மூன்று நாள் வசூலாக ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனையை படைத்துள்ளது.

பண்டிகை தினங்களில் வெளியிடாமல் சாதாரண நாட்களில் ஒரு படம் இந்த அளவுக்கு வசூலிப்பது இதுவே முதல் முறை என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடும் படமாக வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அதில் படத்தின் வேகத்தை தடையாக இருப்பதால் படக்குழு வலிமை திரைப்படத்தில் 14 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. தற்போது ட்ரிம் செய்யப்பட்ட வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் சற்று தொய்வு ஏற்படுகிறது.

ஆகையால் வலிமை படம் ரசிகர்களை திருப்தி படுத்தாமல் இருந்ததாக சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர். தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் 100 கோடி அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வலிமை திரைப்படம் வசூல் வேட்டையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles