Friday, October 11, 2024
-- Advertisement--

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்..!!! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்.

கொரோனா என்ற கொடிய நோய் இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். சிறு வயதிலேயே பலர் உயிரையும் இழக்கின்றனர். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுத்து வந்தாலும் அதற்கான சரியான மருந்துகள் இன்றும் வெளி வரவில்லை என்பதே உண்மை. ஆனால் அதற்கான மாற்று மருந்தினை வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எத்தியோப்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினார். அப டிலகன் என்ற முதியவர் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஒரு வாரம் அந்த முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முதியவர் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர் கூறியது உலகிலேயே அதிக வயதுடைய நபர் கொரோனாவில் இருந்து மீண்டார் என்றால் அது டிலகன் ஆக இருக்கலாம். ஆனால் அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவ கணிப்பு படி அவருக்கு 105 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறுவயது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்து வருகின்ற இந்த நேரத்தில் 114 வயது முதியவர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எத்தியோப்பியாவில் 5000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles