Friday, June 14, 2024
-- Advertisement--

ஸ்டாலின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..!!! முதல் நாளிலே மக்களை அசத்திய ஸ்டாலின்..!!! குவியும் பாராட்டுக்கள்.

தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றவுடன் கோபாலபுரத்து சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்ற பின் உடனே தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் முதல்வர் ஆனதுமே முதல் கையெழுத்து எதற்கு போடப் போகிறார் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவியது. இந்நிலையில் தலைமை செயலகத்திற்கு வந்து சேர்ந்த ஸ்டாலின் தன் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து முதல் கையெழுத்தை போட்டு உள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து கொரோனா நிவாரணத் தொகையாக ரேஷன் அட்டைக்கு ரூபாய் 4000 வழங்க கையெழுத்திட்டு இருக்கிறார்.

முதல் தவணையாக மே மாதத்தில் 2000 ரூபாய் கொரோனா நிவாரண தொகை கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதனை தொடர்ந்து மீதம் உள்ள 2000 ரூபாய் ஜூன் மாதம் கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

ஆவின் பால் விலை 3 ரூபாய் ரூபாய் குறைப்பதாக கையெழுத்திட்டார்.

நாளை முதல் மகளிர் அனைவரும் இலவசமாக நகர பேருந்தில் பயணம் செய்ய கையெழுத்திட்டார்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என கையெழுத்திட்டார்.

மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்பதற்காக தனிப்பிரிவு உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles