Thursday, June 13, 2024
-- Advertisement--

இனி 2021ல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்..!!! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்.

கொரோனா பாதிப்பினால் நாடெங்கும் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா பாதிக்காத மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனா என்ற கொடிய வைரஸ் தாக்கத்தினால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் கொரோனா நோய் குணப்படுத்துவதற்காக சரியான மருந்து இன்றுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கடைப்பிடித்து வரப்பட்டது.

இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறந்தால் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் என்பதால் கல்லூரி மற்றும் பள்ளி திறக்க குழப்பமான சூழல் ஏற்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது அதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி ஆலோசித்தார்.

ஆலோசனை முடிந்த பின்பு கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

அவர் கூறியதை பார்த்தால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles