இனியா கேரளத்து இறக்குமதி தமிழ் படங்களில் நடிப்பதை விரும்பி நடிக்கும் நடிகை என்றே சொல்லலாம். இவருடைய முதல் தமிழ் படம் பாடசாலை ஆனால் இவர் “வாகை சூடவா” என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இவர் நடித்த “வாகைசூடவா” படமும் நிறைய விருதுகளை அள்ளிச் சென்றது. அதனைத் தொடர்ந்து “மௌனகுரு” ,”அம்மாவின் கைபேசி” என்று நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். இனியாவிற்கு ஏகப்பட்ட படங்கள் கிளாமர் சார்ந்த கதைகள் குவிந்தது இருந்தாலும் அதனை எல்லாம் மறுத்துவிட்டு குடும்பபாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இதுவரை கிளாமராக நடிக்காத இந்த கேரளத்து பைங்கிளி சமீபகாலமாக தன்னை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அதில் அவர் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் சற்று ஓவராகவே இருந்தது. மெலிதான உடை அணிந்து மூணார் அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த கேரளா பெண்குட்டி இப்படி ஒரு செயலை செய்யலாமா. இது போன்ற புகைப்படங்களை தவிர்க்கலாமே என்று அறிவுரை கூறி வருகின்றனர்.