தற்போது உள்ள காலகட்டம் மிக மோசமாக உள்ள சூழ்நிலையில் திரை பிரபலங்களும் நிறைய பேர் இறந்து வருகின்றனர். இது சினிமா உலகை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவை பொறுத்தவரை ரிஷிகபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன் உட்பட பல நடிகர்கள் இறக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் பிரபல நடிகரான சுஷாந்த் கபூர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதும் சினிமா ரசிகர்களையும் சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவின் பிரம்மாண்ட படமான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் இயக்குனர் சாட்சி உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். இந்த செய்தி மேலும் சினிமா ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.