Monday, June 17, 2024
-- Advertisement--

எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் வங்கிக்கணக்கை முடக்கிவிட்டார்கள் பப்ஜி மதனின் மனைவி குற்றச்சாட்டு..!!! என்ன ஆனது 1.01 கோடி ?

பப்ஜி மதன் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வேறொரு வெர்சனில் விளையாடி யூடியூப் சேனல் மூலமாக பல லட்ச ரூபாய் சம்பாதித்து வந்தார். ஒரு நாளுக்கு 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டு விளையாடி அதில் உள்ள நுணுக்கங்களை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு வந்தார் அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டி வந்தார். மதன் மட்டும் டாக்சிக் மதன் எண் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலம் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது காரணமாக யூடியூபர் மதனை கைது செய்து போலீசார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் நிவாரண நிதி என்று 2.89 கோடி பணம் வசூலித்து அந்த பணத்தில் சொகுசு கார்கள் நகைகள் வாங்கியதாக பலர் கொடுத்த புகாரின் பெயரிலும் கைது செய்யப்பட்டார்.

பப்ஜி மதனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது மனைவி கிருத்திகாவை அழைத்து விசாரணை நடத்தினார்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்த கிருத்திகா ஜாமீன் பெற்று வெளியே வந்தார் வெளியே வந்தவுடன் தன் கணவர் மதன் மிகவும் நல்லவர் அவர் எந்தவித மோசடியும் செய்யவில்லை நான் அதை நிரூபிப்பேன் எங்களிடம் ஆடி காரை தவிர எந்த ஒரு சொகுசு காரும் இல்லை என்று பத்திரிகையாளரிடம் கூறியிருந்தார் அந்த வீடியோ வைரலாகி பல மீம்ஸ் கிரியேட்டர்கள் டெம்ப்ளட்டாக உபயோகிக்க ஆரம்பித்தனர்.

தற்பொழுது மதன் மற்றும் கிருத்திகாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. யாரும் வங்கி கணக்கை முடக்க போகிறோம் என்ற அறிவிப்பும் கொடுக்கவில்லை அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்திற்கு வங்கிக்கணக்கில் முடக்க முடியும் ஆனால் நீண்டகாலத்திற்கு வங்கியின் கணக்கை முடக்கி வைப்பது சட்டபூர்வ உரிமைய பாதிக்கிறது என்று மதனின் மனைவி கிருத்திகா தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

கிருத்திகா மதுவிற்கு எதிராக காவல் துறையினர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கிருத்திகாவின் வங்கி கணக்கில் 1.01 கோடி யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரிய வரும் அதுவரை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

தற்பொழுது இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கிருத்திகாவின் மறுபடி முன்கூட்டியே வங்கி கணக்கு முடக்கம் செய்கிறோம் என்று தெரியப்படுத்தி நோட்டீஸ் அனுப்பி இருந்தால் அது ஆதாரங்களை அளிக்க வழிவகுக்கும் அதனால் வங்கி கணக்கு முடக்கம் செய்வது குறித்து நோட்டீஸ் அளிக்க அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.

அதுமட்டுமல்லாமல் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சம்பந்தப்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று சென்னை நீதிமன்றம் மதனின் மனைவி கிருத்திகாவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles