விகே சசிகலா அவர்கள் சென்னை போயஸ் கார்டெனில் பத்திர்கையாளர்களி சந்தித்தார் அப்போது அவர் கொடுத்த பேட்டியில் அரசாங்கத்தை கேட்கக்கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு மடியில கணம் இல்லனா பயப்பட தேவையில்ல. என்ன பண்ணிக்கிட்டு இருக்கு இந்த அரசு கொடநாடு கேஸை வச்சுக்கிட்டு இந்த திமுக என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்கு என்பது ஊருக்கே தெரியும் உலகத்துக்கே தெரியும்.
உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்தில் போகுது. நீங்க தான் அரசாங்கம்னு சொல்றிங்க போலீசை அப்படி வச்சிருக்கோம்னு சொல்றீங்க ஆனா அந்த வழக்கை முடிக்க கூட உங்களுக்கு வக்கு இல்லையே.
தேர்தலுக்கு தேர்தல் கொடநாடுன்னு சொல்றிங்களே பொறுப்புள்ள முதலமைச்சர் அவர்கள் ஏன் அந்த கேஸ் எடுத்து நடத்த மாட்டேங்கிறாரு. யாரு மேல தப்பு இருக்கோ அவர்கள் மீது ஆக்சன் எடுங்க அது யாராக இருந்தாலும் சரி ஏன் அதை செய்ய மாட்டேங்கிறீங்க.
அரசாங்கம் சரியா நடக்கலங்குறதுக்கு நான் வெளிப்படையா குற்றச்சாட்டை வைப்பேன். நீங்க பழைய கதையை பேசிட்டு போவீங்க எவ்வளவு நாள் தான் பழைய கதையை வச்சிக்கிட்டு ஓட்டுவீங்கன்னு நான் பார்க்க தானே போறேன் என்று திமுகவிற்கு கேள்வி எழுப்பினர் சசிகலா.
தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவை பற்றி சசிகலா எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருக்கிறார்கள் அது பற்றி உங்கள் பதில் என்ன என்று கேட்க அவர் பேசினார் என்றால் நான் வாயை மூடிட்டு போகணுமா என்று கூறியவர்.
எப்ப கொடநாடு வளர்க்க முடியுதோ அப்பதான் ஊர் உலகத்துக்கு எல்லாமே தெரிய வரும் என்று கூறிவிட்டு சசிகலா சென்றார். உடனாய் அவருடன் வந்தவர்கள் சின்னம்மா வாழ்க என்று கோஷமிட்டனர்.