Home Uncategorized தமிழக சட்டசபையில் ஒலித்த டெல்டாவின் குரல்..!!! குடிசை வீட்டில் வாழ்ந்தவரை திருத்துறைப்பூண்டி MLA வாக கோட்டைக்கு...

தமிழக சட்டசபையில் ஒலித்த டெல்டாவின் குரல்..!!! குடிசை வீட்டில் வாழ்ந்தவரை திருத்துறைப்பூண்டி MLA வாக கோட்டைக்கு அனுப்பிய மக்கள்.

thiruthuraipoondi MLA Marimuthu TN Assembly speech

குடிசையில் வாழ்ந்து வரும் ஒருவர் எம்எல்ஏ ஆக முடியும் என்பதற்கு முன்னுதாரணம் தான் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து அவர்கள். மக்களிடம் எளிதாக பழகக்கூடிய இவர் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டு சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார்.

டெல்டா மாநிலங்களில் அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படவில்லையே என்ற வருத்தம் மக்களுக்கு இருந்தாலும் இந்த இடத்திலிருந்து ஒரு எம்எல்ஏவின் குரல் சட்டசபையில் ஒலிக்கப் போகிறது என்பதை நினைத்து அனைவரும் பெருமைப்பட்டு வந்தனர்.

எம்எல்ஏ மாரிமுத்து அவர்கள் தமிழக சட்டசபையில் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கான அடிப்படைத் தேவைகள் பற்றி எடுத்துரைப்பதற்கு முன்பு முதல்வர் மற்றும் அவையோர் அனைவரையும் வணங்குகிறேன் என்று கூறியதை தொடர்ந்து மக்களுக்கு பணி செய்ய வாய்ப்பளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை கோட்டைக்கு அனுப்பி வைத்த என் தொகுதி மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் என்று உருக்கமாக உரையை ஆரம்பித்தார்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற முதல்வர் அறிவித்த பிறகு எங்களது தொகுதியில் எந்த ஒரு நகரப்பேருந்துமே போகவில்லையே என்று போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்துவிட்டு நான் வீடு திரும்புவதற்குள் போக்குவரத்து மேனேஜரை என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்பி ஆலோசனை செய்து திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு 8 நகரப் பேருந்துகள் வழங்கியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு புறநகர் சாலை திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது ஆனால் பத்து வருடங்களாக அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கிடப்பிலேயே இருக்கிறது என்று கூறினார் அதற்குப் பதிலளித்த பொதுப்பணி துறை அமைச்சர் திருத்துறைபூண்டி எம்எல்ஏ கூறியதுபோல கிடப்பில் தான் இருந்தது இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டது விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று முன்னுரிமை கொடுக்கப்படும்.

எங்களது தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த மாவட்டத்திற்கு புறவழி சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரே சாதாரண மனிதனாக குடிசையில் இருந்து கோட்டைக்கு சென்ற இவர் பலருக்கு முன்னுதாரணம்.

Exit mobile version