Home CINEMA NEWS வலிமை படத்திற்கு பிண்ணனி இசை கொடுத்தது யார் தெரியுமா..!!! செம அப்செட் ஆன யுவன் ஷங்கர்...

வலிமை படத்திற்கு பிண்ணனி இசை கொடுத்தது யார் தெரியுமா..!!! செம அப்செட் ஆன யுவன் ஷங்கர் ராஜா..!!! வெளியான தகவல்.

valimai RR done by music director gibran

வலிமை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த திரைப்படம் பொங்கலுக்கு விருந்தாக வந்து திரையரங்கிற்கு ரசிகர்களை மீண்டும் கொண்டுவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்று அறிவித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு பல கோடிகளை செலவு செய்து எடுத்த வலிமை படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் ஒருவேளை 50% பார்வையாளர்கள் அனுமதி கொடுத்தால் படத்தின் பட்ஜெட் செலவை எடுப்பதே கடினமான ஒன்றாக இருக்கும் என்று நினைத்த படக்குழுவினர் திடீரென்று வலிமையை பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிக் கொண்டார்கள்.

இந்நிலையில் வலிமை படத்தைப் பற்றி கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது வலிமை படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அஜித் யுவன் சங்கர் ராஜா காம்பினேஷனில் வெளியாகும் பாடல்கள் எப்போதும் மாஸாக இருக்கும்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதனால் வலிமை படத்தின் பாடல்களே இப்படி இருக்கிறது பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா கண்டிப்பாக அஜித்தின் முந்தைய படங்கள் போல மிரட்டி இருப்பார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

தற்போது வந்த தகவலின் படி யுவன்சங்கர் ராஜா அவர்கள் வலிமை படத்திற்கு பின்னணி இசை அமைத்ததாகவும் அந்த இசை படக்குழுவினருக்கு பிடிக்கவில்லை என்பதால் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பின்னணி இசையை தவிர்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களை அணுகி வலிமை படத்திற்கு பின்னணி இசை அமைக்குமாறு கேட்டுள்ளனர்.

வலிமை படத்திற்கு பின்னணி இசை கொடுத்தது ஜிப்ரான் தான் என்றும் இதனால் யுவன் தரப்பு கொஞ்சம் அப்செட் ஆகவே உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version