Home NEWS தமிழகத்தில் நேற்று மட்டும் TASMAC இத்தனை கோடி வசூலா..!!! ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக...

தமிழகத்தில் நேற்று மட்டும் TASMAC இத்தனை கோடி வசூலா..!!! ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக குடிமகன்கள்.

tamilnadu tasmac collection

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அந்தந்த மாநில அரசு தற்போது கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை செய்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அது போன்று மற்ற தினங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதை தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக குடிமகன்கள் நேற்று டாஸ்மாக் நோக்கி படையெடுத்து உள்ளனர். கிட்டத்திட்ட நேற்று மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 217 .96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 50 .4 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் நாற்பத்தி 43.20 கோடி மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

பண்டிகை தினங்களுக்கு முன் கோடி கோடியாக மது விற்பனை ஆவது அனைவரும் தெரிந்த ஒன்றே ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிப்பு வந்ததும் டாஸ்மாக் கடையில் குடிமகன்களின் கூட்டம் கலை கட்டியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version