Home NEWS நடுரோட்டில் காதலியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்தபடி பைக் ஓட்டிய வாலிபர்…!!! புடிங்க சார் அவனை புடிச்சி...

நடுரோட்டில் காதலியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்தபடி பைக் ஓட்டிய வாலிபர்…!!! புடிங்க சார் அவனை புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் நெட்டிசன்கள் முழக்கம்..!!!

uo couple romance in bike

பொது இடங்களில் சாகசம் செய்வதும், சாலைகளில் ஈடி மோட்டார் சைக்கிள்களில் விதிகளை மீறி சாகசம் வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் REELS பதிவிடுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் ஒரு இளம்ஜோடி மோட்டார் சைக்கிளில் ‘ரொமான்ஸ்’ செய்தபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த வீடியோவில் இளம்பெண் மோட்டார் சைக்கிளின் டேங்கில் காதலனை நோக்கி அமர்ந்து, கட்டி பிடித்தபடி இருக்கிறார். அப்போது காதலன் ‘ரொமான்ஸ்’ செய்தபடியே பைக்கை வேகமாக ஓட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் ஹாப்பூர் போலிசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பைக் ஓட்டிய வாலிபர் மீது மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் அபராத தொகையை தங்களது ‘எக்ஸ் தளத்தில் பதிவு செய்த போலீசார், இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்

Exit mobile version