Home NEWS எங்கப்பன் குதிருக்குள் இல்லை போல உள்ளது அதிமுகவினர் வெளிநடப்பு..!!! என்ன நடந்தது தமிழக சட்டசபையில் விவரம்...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை போல உள்ளது அதிமுகவினர் வெளிநடப்பு..!!! என்ன நடந்தது தமிழக சட்டசபையில் விவரம் இதோ.

kodanadu robbery case mk stalin open talk

தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் அவர்கள் கொடநாடு கொலை வழக்கைப் பற்றி பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏ அனைவரும் சட்டசபையை புறக்கணித்தனர்.

ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கொடநாடு வழக்கில் இணைக்க பார்க்கிறார் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள் என்று தர்ணா போராட்டத்திலும் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை சம்பந்தப்படுத்த பார்க்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர் எனக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி செய்கிறார்கள் என்று கூறியிருந்தனர்.

தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல அப்படிங்கறது நிரூபித்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள் கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மரணங்கள் விபத்து மரணங்கள் போன்றவை மக்களை சந்தேகத்தை ஏற்படுத்தியது அதனால்தான் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் நாங்கள் வாக்குறுதி கொடுத்து இருந்தோம் அதன் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியோடு தான் விசாரணை நடைபெறுகிறது.

இதில் அரசியல் தலையீடு பழிவாங்கும் எண்ணமும் நிச்சயமாக இல்லை மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்று கூறியவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்களே திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் இந்த கொடநாடு கொலை வழக்கு விசாரணை என்று கூறியிருந்தார்.

Exit mobile version