Home NEWS 100 நாட்களில் 187 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு…!!! அதிரடி காட்டும் தமிழக அரசு.

100 நாட்களில் 187 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு…!!! அதிரடி காட்டும் தமிழக அரசு.

sekar babu

தமிழகத்தில் 100 நாட்களில் அக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 187 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து இந்திய கம்யூனிஸ்ட் பேசியதாவது காவிரி டெல்டா கடைமடைபகுதியில் நாங்கள் இருக்கிறோம்.

கிணற்று நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த கிணற்றுகளில் டீசல் மூலம் இயங்கும் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பெட்ரோல் விலையை குறைத்தது போல் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து ஏழை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் அதே இடத்தில் வீடு கட்டிக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 187 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதை அமைத்து வாழும் மக்கள் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. குழுவாக இருப்பவர்களை கோயில் உள் வாடகைதாரராக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் இதேபோல் இருந்த 238 பேர் கோயில் உள் வாடகைதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இந்த அரசு இதுபோன்ற மக்களை காப்பாற்றும் திருத்துறைப்பூண்டியில் புறவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது இப்போது நில எடுப்பு பணிக்காக ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version