Home HEALTH TIPS சிறுநீரக பிரச்சனையின் அறிகுறி…!!! சிறுநீரக பிரச்சனையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி..?

சிறுநீரக பிரச்சனையின் அறிகுறி…!!! சிறுநீரக பிரச்சனையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி..?

kidney disease symptoms

சிறுநீரகம் உடலின் கழிவுகளை வெளியேற்றும் ஒரு கருவி என்று சொல்லாம். ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள், தேவைக்கு அதிகமான உப்புகள், உடலுக்கு வந்துவிட்ட நச்சுகள் தேவைக்கு மிஞ்சிய மருந்துகள் எல்லாவற்றையும் தினசரி நமது உடலில் இருந்து வெளியேற்றுவது சிறுநீரகம் தான்.

நம் இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் சிறுநீரகம் தான் பெறுகிறது உடலுக்கு தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவை நீக்கி வைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா. குளோரைடு போன்ற கழிவு பொருட்களை பிரித்து எடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.

அதே வேளையில் சோடியம், பொட்டாசியம் போன்ற தூதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. உடலின் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது சிறுநீரகம்.

வைட்டமின் D பதப்படுத்தி கால்சிட்ரியஸ் எனும் ஹார்மோனாக மாற்றி தருகிறது இது எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. உணவு சத்துக்கள் வளர்ச்சிதை மாற்ற பணிகளுக்கு உதவுகிறது

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்:

சிறுநீரகம் பாதிக்கப்படாமல் சிறுநீர் பிரிவது குறையும்.

வாந்தி வரும் தூக்கம் குறைவாக இருக்கும்.

கடுமையான உடல் சோர்வு ஏற்படும்.

உடலில் அரிப்பு ஏற்படும் முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரக பாதிப்பு ஆரம்ப காலத்திலேயே அதற்கான மருந்துகள் எடுத்து குணப்படுத்தி விடலாம்.

உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் தான் சிறுநீரகத்தின் பெரிய எதிரியே. உயர் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரகப் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உணவில் உப்பை குறைத்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். அப்பளம், சமையல் சோடா வத்தல் சிப்ஸ் பாப்கார்ன், புளித்த மோர், சாக்லேட், பிஸ்கட் ரெட் மீட் என்று சொல்லக்கூடிய ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், உடனடி செயற்கை வண்ண உணவுகள் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகத்தில் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம்

குறிப்பாக சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும். தினமும் குளிக்கும் போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மது புகையிலை பழக்கம் நிச்சயம் கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் தானே மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

புரத உணவை பொருத்தமட்டில் காய்கறி புரதம் சிறந்தது சிக்கனில் கிடைக்கும் புரதத்தை காட்டிலும் பாசிப்பயிற்சியில் உள்ள புரதம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றது.

சோடியம் பொட்டாசியம் குறைந்த அளவில் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு தவிர்ப்பது நல்லது இவை நிறைய பொட்டாசியம் சத்து உடையது.

பப்பாளி, கொய்யா, பைனாப்பிள் போன்ற பழங்கள் குறைந்த அளவிலான பொட்டாசியம் சத்து உடையவை.

Avoid Junk foods

உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் தேவையற்ற உணவை உட்கொள்வதால் நாம் தேவையற்ற நோய்களை உடம்பில் ஏற்றுக் கொள்கிறோம். உடம்பில் அக்கறை காட்டுவோம் நலமுடன் வாழ்வோம்.

Exit mobile version