Home HEALTH TIPS உடல் எடையை குறைக்கும் கொள்ளு சாம்பார்…!!! செய்முறை இதோ.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு சாம்பார்…!!! செய்முறை இதோ.

இன்றைக்கு உடல் பருமன் பெரிய வியாதியாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க கொள்ளு அதிகமாய் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் சாம்பார் வைக்கும்போது கொள்ளு சாம்பார் வைத்தால் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பை தடுக்க முடியும்.

கொள்ளு சாம்பார் செய்ய தேவையானவை ; முளை கட்டிய கொள்ளு 200 கிராம், சின்ன வெங்காயம் 15 எண்ணம், தக்காளி 1.காய்ந்த மிளகாய் 4. கத்தரிக்காய் – 2, முருங்கைக்காய் – 2, மல்லி பொடி – ஒரு தேக்கரண்டி, மிளகு, சீரகம் கால் தேக்கரண்டி, தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, தேவையான அளவு பெருங்கயம், புளி,உப்பு.

முதலில் முளைகட்டிய கொள்ளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கவும். அதனுடன் தக்காளி, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போடு வதக்கவும். கத்தரிக்காய், முருங்கைக்காய் நறுக்கிச் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி தூள், மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்த கொள்ளை மிக்சியில் அரைத்து சேர்க்கவும். கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.

Exit mobile version